பாகிஸ்தான் செல்லும் இலங்கை கிரிக்கட் அணி?

Thursday, August 17th, 2017

இலங்கை கிரிக்கட் அணியை பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் அனுப்ப இலங்கை கிரிக்கட் தீர்மானித்துள்ளமையை, பாகிஸ்தானின் கிரிக்கட் சபை வரவேற்றுள்ளது.

2009ஆம் ஆண்டு லாஹுரில் வைத்து இலங்கை கிரிக்கட் அணியின் மீது தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து, சர்வதேச நாடுகள் பாகிஸ்தான் சென்று விளையாட தயக்கம் காட்டி வருகின்றன.இந்த நிலையில் இந்த வருட இறுதியில் இலங்கை அணியை அங்கு அனுப்பி 3, 20க்கு20 கிரிக்கட் போட்டிகளில் பங்கேற்க சிறிலங்கா கிரிக்கட் விருப்பம் தெரிவித்துள்ளது.அந்தநாட்டின் பாதுகாப்பு நிலைமைகளை ஆராய்ந்தப் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக, சிறிலங்கா கிரிக்கட் அறிவித்துள்ளது.இதன்ஊடாக பாகிஸ்தானில் மீண்டும் சர்வதேச கிரிக்கட் போட்டிகளை நடத்த வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என்று அந்த நாட்டின் கிரிக்கட் சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

Related posts: