பாகிஸ்தான் செல்கிறது இலங்கை அணி!

இலங்கை – பாகிஸ்தானுக்கு இடையிலான இறுதி 20க்கு இருபது போட்டி லாகூரில் இடம்பெறும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் 29ஆம் திகதி லாகூர் மைதானத்தில் குறித்த போட்டி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை கிரிக்கெட் அணி கடந்த 2009ம் ஆண்டு பாகிஸ்தானில் விளையாடியபோது அவர்கள் சென்ற பஸ் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதன்பின்னர் முக்கிய நாடுகள் பல தமது அணிகளை பாகிஸ்தானுக்கு அனுப்புவதில் தயக்கம் காட்டி வந்தன.
தற்போது ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு சுற்றுப் பயணம் செய்து விளையாடி வரும் இரு அணிகளும் டெஸ்ட் தொடரை நிறைவு செய்துள்ளதோடு ஒருநாள் தொடரில் மோதி வருகின்றன. இதனையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இதில் கடைசிப் போட்டி மட்டும் பாகிஸ்தானின் லாகூரில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. எனினும் குறித்த முடிவு தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்துஇ இந்தத் தீர்மானத்தில் இழுபறி நிலை ஏற்பட்டது.
Related posts:
|
|