பாகிஸ்தான் சுப்பர் லீக்: டில்ஷான் ,பெரேராஷ ஒப்பந்தம்!

Wednesday, January 25th, 2017

எதிர்வரும் பெப்ரவரி மாதம் டுபாயில் ஆரம்பமாகவுள்ள பாகிஸ்தான் சுப்பர் லீக் போட்டித்தொடரில் இலங்கை அணியின் முன்னணி வீரர்களான திலகரத்ன டில்சான் மற்றும் திசர பெரேரா ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

பெஷாவர் ஷல்மி அணிக்காக திலரத்ன டில்சானும், குவெட்ட கிலாடியேட்டர்ஸ் அணிக்காக திசர பெரேராவும் விளையாடவுள்ளனர்.

அத்தோடு இந்த தொடரில் விளையாட இலங்கை அணியின் குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளனர்.

பாகிஸ்தானின் ஐந்து மாகாண தலைநகரங்களின் பெயர்களைக் கொண்ட ஐந்து அணிகள் இந்த தொடரில் பங்கேற்கவுள்ளன. இதன் பரிசுத் தொகை 1 மில்லியன் டொலர்களாகும். இந்த தொடர் வரும் பெப்ரவரி 9 தொடக்கம் மார்ச் 7 வரை டுபாய் மற்றும் ஷர்ஜாவில் இடம்பெறவுள்ளது. இதன் இறுதிப் போட்டி லாஹூரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

coltkn-01-25-fr-11162423438_5175962_24012017_MSS_CMY

Related posts: