பாகிஸ்தான் சுப்பர் லீக் கிரிக்கெட் போட்டியில் திசர பெரேரா கடும் விமர்சனத்திற்கு…

பாகிஸ்தான் சுப்பர் லீக் கிரிக்கெட் போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடட் அணிக்கு எதிரான நேற்றைய(16) போட்டியில் க்குவேட்டா கேலேடியேடேர்ஸ் அணியினை பிரதிநிதித்துவப்படுத்தி ஆடிய திசர பெரேரா கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளார்.
குறித்த போட்டியில் திசர பெரேரா வீசிய 3 ஓவர்களும் 1 பந்திலும் எதிரணி வீரர் ஒருவர் 40 ஓட்டங்களை குவித்திருந்தார்.
இப்போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியினை தன்வசமாக்கியதும் இஸ்லாமாபாத் யுனைடட் அணியினரே…
முதலில் துடுப்பெடுத்தாடிய க்குவேட்டா கேலேடியேடேர்ஸ் அணியினர் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 148 ஓட்டங்களை பெற்றிருந்தனர்.
இஸ்லாமாபாத் யுனைடட் அணியினர் 20 ஓவர் முடிவுக்கு முன்னரே 5 விக்கெட் இழப்பிற்கு வெற்றி என அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|