பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் சங்கக்கார அதிரடி!

Sunday, February 19th, 2017

இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரும், அணியின் முன்னாள் தலைவருமான குமார் சங்கக்கார பாகிஸ்தான் சுப்பர் லீக் இருபது-20 போட்டியில் சிறப்பாக துடுப்பாட்டத்தினை வெளிக்காட்டி வருகின்றார்.

பி.எஸ்.எல் போட்டியில் கராச்சி அணியின் தலைவராக உள்ள குமார் சங்கக்கார கடந்த வியாழக்கிழமை போட்டியில் சிறப்பாக துடுப்பாட்டத்தினை வெளிக்காட்டினார்.

அந்த வகையில் 45 பந்துகளை எதிர்கொண்டு 65 ஓட்டங்களை பெற்றார் சங்கா. அதுமட்டுமன்றி அணியின் வீரர்கள் பெற்றதில் அதிக ஓட்ட எண்ணிக்கையாக இது உள்ளது.

குறித்த ஆட்டத்தில், ஒரு சிக்ஸர் மற்றும் 8 பெளண்டரிகள் அடங்கலாக அந்த எண்ணிக்கையினை பெற்றுக்கொண்டார். மேலும் குறித்த போட்டியின் அந்த அணி தோல்வியை அடைந்திருந்தாலும், சங்காவின் அதிரடி ஆட்டம் எல்லோர் மனதையும் கவர்ந்தது எனலாம்.

coltkn-02-18-fr-11183512345_5231780_17022017_MSS_CMY

Related posts: