பாகிஸ்தான் – இலங்கை டெஸ்ட் சமநிலையை நோக்கி!

Monday, October 2nd, 2017

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸ் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 422 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

அந்த அணி சார்பாக அஷார் அலி 85 ஓட்டங்களையும் , ஹரிஸ் சொஹாலி 76 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர்.ஷான் மசூத் 59 ஓட்டங்களையும் , சமி ஹஸ்லாம் 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் 5 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.அதன்படி , ரங்கன ஹேரத் இன்னிங்ஸ் ஒன்றில் 5 விக்கட்டுக்களை வீழ்த்திய 32 வது சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

சுரங்க லக்மால் மற்றும் நுவன் பிரதீப் ஆகியோர் தலா இரணடு விக்கட்டுக்கள் வீதம் பெற்றுக்கொண்டனர்.இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 419 ஓட்டங்களை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: