பாகிஸ்தான் அணி வெற்றி!

i Wednesday, September 13th, 2017

பாகிஸ்தான் அணிக்கும் மற்றும் உலக பதினொருவர் அணிக்கும் இடையில், சுதந்திரக் கிண்ணத் தொடரின் முதலாவது 20க்கு20 கிரிக்கட் போட்டி நேற்றையதினம் லாஹுரில் நடைபெற்றது.

இதில் பாகிஸ்தான் 20 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. போட்டியில் முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 5 விக்கட்டுகளை இழந்து 197 ஓட்டங்களைப் பெற்றது. பாபர் அசாம் 86 ஓட்டங்களைப் பெற்றளித்தார்.

198 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய ஃபப் டு ப்ளசி தலைமையிலான உலக பதினொருவர் அணி, 20 ஓவர்களில் 177 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வி அடைந்தது.இந்த தொடரின் இரண்டாவது போட்டி இன்று நடைபெறவுள்ளது.