பாகிஸ்தான் அணி தொடரை கைப்பற்றியது!

பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையே இடம்பெற்ற 3 போட்டிகள் கொண்ட 20க்கு 20 கிரிக்கட் தொடரை பாகிஸ்தான் அணி 2க்கு 1 என கைப்பற்றியது.
இந்த தொடரின் இறுதி போட்டியில் நாணய சூழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாடி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 181ஓட்டங்களைப் பெற்றது.
இதைத் தொடர்ந்து வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய நியூஸிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 163 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 18ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. போட்டியின் சிறப்பாட்டக்காரராக பாகிஸ்தான் அணியின் ஷதப் கான் தெரிவு செய்யப்பட்டார். தொடரின் சிறப்பாட்டக்காரராகபாகிஸ்தான் அணியின் மொஹமட் அமீர் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பாகிஸ்தானுக்கு சென்று விளையாட மாட்டோம் - இலங்கை !
மீண்டும் கொல்ஃப் தொடரில் டைகர் வுட்ஸ்
ஸ்டீவ் ஸ்மித்தின் சொத்து மதிப்பு வெளியானது!
|
|