பாகிஸ்தான் அணி தலைவருக்கு ஒரு போட்டியில் விளையாட தடை!

Wednesday, November 23rd, 2016

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி மெதுவாக பந்து வீசியதால் தலைவர் மிஸ்பா உல்-ஹக் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி மெதுவாக பந்து வீசியதால் தலைவர் மிஸ்பா உல்-ஹக் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி வருகிறது.இதில் கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் 105 ரன் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி 31.3 ஓவர்களில் இலக்கை கடந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த போட்டியில் 2-வது இன்னிங்சில் பாகிஸ்தான் அணி வீரர்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்து வீசி முடிக்கவில்லை. பந்து வீச்சை முடிக்க கூடுதலாக நேரம் எடுத்து கொண்டனர். இது குறித்து போட்டி நடுவர்கள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெக்னிக்கல் கமிட்டியிடம் புகார் செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தொழிநுட்ப குழு பாகிஸ்தான் அணி வீரர்கள் அனைவருக்கும் போட்டி கட்டணத்தில் 20 சதவீதத்தை அபராதமாக விதித்தது. தலைவர் மிஸ்பா உல்-ஹக்குக்கு 40 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது. அத்துடன் அவருக்கு ஒரு போட்டியில் விளையாடவும் தடை விதிக்கப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருந்தது. 12 மாதத்துக்குள் மீண்டும் அதே குற்றச்சாட்டில் அந்த அணி சிக்கி இருப்பதால் தலைவர் மிஸ்பா உல்-ஹக்குக்கு இந்த தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. டெஸ்ட் போட்டியில் மிஸ்பா உல்-ஹக் தடைக்கு ஆளாகி இருப்பது 2-வது முறையாகும். 2010-ம் ஆண்டில் இதேபோல் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட அவருக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.

பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் வருகிற 25-ம் திகதி தொடங்குகிறது. தடை காரணமாக மிஸ்பா உல்-ஹக் இந்த போட்டியில் விளையாட முடியாது. ஏற்கனவே தனது மாமனார் இறந்ததால் மிஸ்பா உல்-ஹக் நாடு திரும்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

456

Related posts: