பாகிஸ்தான் அணியை புகழ்ந்துள்ள கிளார்க்!  

Wednesday, August 24th, 2016

அவுஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரான கிளார்க், பாகிஸ்தான் அணி கடந்த 6 வருடங்களாக சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டிகள் விளையாடாமல் தரவரிசையில் முதல் இடம் பிடித்தது பாரட்டதக்க விஷயம் என தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணி முதல் இடம் பிடித்தது குறித்து கிளார்க் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது, பாகிஸ்தான் அணிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். பாகிஸ்தான் அணி கடந்த 2009 ஆண்டுகளுக்குபிறகு அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடர்கள் விளையாடவில்லை.

அதையெல்லாம் மீறி அனைத்து வெளிநாட்டு தொடர்களில் சிறப்பாக செயல் பட்டு டெஸ்ட் அணிக்கான தரவரிசையில் முதல் இடம் பிடித்துள்ளது சிறப்பான விஷ்யம்.

If this is the case, congratulations Pakistan. Makes for a great summer in Australia. https://t.co/BgkcxtSGOS

— Michael Clarke (@MClarke23) August 22, 2016

வரும் டிசம்பர் மாதம் அவுஸ்திரேலியா வந்து விளையாடவுள்ள பாகிஸ்தான் அணிக்கு இது ஒரு நம்பிக்கையை அளிக்கும்.

மேலும் கடந்த ஆறு வருடங்களாக பாகிஸ்தான் அணி மற்றும் அதன் வீரர்களை சிறப்பாக ஒருங்கினைத்ததன் மூலம் தான் பாகிஸ்தான் அணி முதல் இடம் பிடித்துள்ளது.இதற்கு எல்லாம் டெஸ்ட் அணியின் தலைவர் மிஸ்பாக் உல்ஹக்தான் காரணம் என பாராட்டியுள்ளார்.

Congratulations to Pakistan. Have not played a home Test for a long time. Very tight up the top. Bring on the summer pic.twitter.com/ljtmbxkkUq

— Michael Clarke (@MClarke23) August 22, 2016

Related posts: