பாகிஸ்தான் அணியை குட்டிச்சுவராக்கியது வக்கார் யூனிஸ் – கம்ரன் அக்மல்!

Saturday, July 29th, 2017

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் வக்கார் யூனிஸால் தான் அந்த அணி குட்டிசுவராகி விட்டது என விக்கெட் கீப்பர் கம்ரன் அக்மல் சாடியுள்ளார்.

பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் கம்ரன் அக்மல் அளித்துள்ள பேட்டியில், வக்கார் பயிற்சியாளராக தோல்வியடைந்தவர், அவரால் பாகிஸ்தான் அணிக்கு ஏகப்பட்ட சேதம் ஏற்பட்டதாக கூறியுள்ளார்.

பரிசோதனை முயற்சிக்கான தன்னார்வத்தில் தங்களை நிரூபித்த வீரர்களை வீட்டுக்கு அனுப்பி, அணியைக் குட்டிச்சுவராக்கியதோடு 2-3 ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு சென்றுவிட்டதாக கூறியுள்ளார்.

மேலும் அணியை முன்னுக்கு எடுத்து செல்ல வக்கார் யூனிஸிடம் திட்டம் எதுவும் இல்லை என கூறிய அக்மல் பயிற்சியில் அவர் கடினம் காட்டினாலும் வீரர்களின் திறன் வளர்ச்சி, கிரிக்கெட் வளர்ச்சி அவரால் சேதமடைந்தது என கூறியுள்ளார்.

வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் 7 புதுமுகங்களை அணிக்கு அவர் கொண்டு வந்தார். இதனால் ஒருநாள் மற்றும் டி20 தொடரை அவர்களிடம் முதல் முறையாக இழந்தோம் என கம்ரன் அக்மல் கூறியுள்ளார்.

Related posts: