பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர்!

Tuesday, May 10th, 2016

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மிக்கி ஆர்தரை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நியமித்துள்ளது. உலக இருபதுக்கு-20-இல் பாகிஸ்தான் ஆரம்ப சுற்றிலேயே வெளியேறியிருந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் இராஜினாமாச் செய்ய வக்கார் யூனிஸையே ஆர்தர் பிரதியீடு செய்யவுள்ளார்.

மேற்படி சந்தர்ப்பத்தின் மூலம் மூன்றாவது தடவையாக சர்வதேச அணி ஒன்றுடன் ஆர்தர் பணியாற்றவுள்ளார். 2005ஆம் ஆண்டு தொடக்கம் 2010ஆம் ஆண்டுவரை தென்னாபிரிக்க அணியின் பயிற்சியாளராக இருந்த இவர், 2011ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை அவுஸ்திரேலிய அணியின் பயிற்றசியாளராக இருந்தார்.

இம்மாத இறுதியில் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக ஆர்தர் பொறுப்பேற்பார் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: