பாகிஸ்தானை வெற்றிகொள்ளாத இந்திய அணி எப்படி முதல்தர அணியாகும்? – டீன் ஜோன்ஸ்

Sunday, August 13th, 2017

.சி.சியின் தரவரிசையினை வெளியிட்டிருந்தாலும், டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியினை முதன்மை அணியாக ஏற்றுக்கொள்ள முடியாது என, அவுஸ்திரேலிய கிரிக்கட் அணியின் முன்னாள் ஜாம்பவான் டீன் ஜோன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அணி குறித்த இவரது கருத்து பலரது  விமர்சனத்திற்கும், உள்ளாகியுள்ளது.

அண்மையில் .சி.சி  வெளியிட்ட கிரிக்கட் அணிகளின் தரநிலைக்கு அமைய இந்திய அணி டெஸ்ட் அணிகளில் முதன்மை அணியாக விளங்குகின்றது.

இந்திய அணி இலங்கைக்கு கிரிக்கட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்ற நிலையில், தற்போது, கண்டி பல்லேகல மைதானத்தில் 3 வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றது.

இந்திய அணியின் வெற்றிப்பயணம் தொடர்கின்ற நிலையில், தரவரிசையில் தொடர்ந்தும் முதலிடத்திலிருக்கும் இந்திய அணியின் திறமை குறித்து, டீன் ஜோன்ஸ் இவ்வாறான கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்திய அணி அவர்களது பரம எதரி அணியான பாகிஸ்தான் அணியுடன் கிரிக்கெட் விளையாடுவதை தவிர்த்து வரும் நிலையில், அவர்களை எவ்வாறு, முதல்தர அணி என்று குறிப்பிடலாம் என்றும், கேள்வி எழுப்பியுள்ளார்.

எனவே, பாகிஸ்தான் அணியுடன் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அவர்களை வெற்றிகொண்டு, தங்களை முதல்தர அணி என்று அவர்கள் நிரூபிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related posts: