பாகிஸ்தானை செய்வினை வைத்து வென்றதா இலங்கை? மறுக்கிறார் விளையாட்டுதுறை அமைச்சர்!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியை இலங்கை செய்வினை வைத்து வென்றதாக வெளியான தகவலை விளையாட்டு துறை அமைச்சர் ஜெயசேகரா மறுத்துள்ளார்.
ஐக்கிய அரபு நாடுகளில் சமீபத்தில் நடைபெற்ற இலங்கை- பாகிஸ்தான் அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரை இலங்கை வென்றது.
இந்த வெற்றிக்கு பிறகு இலங்கையை சேர்ந்த பெண் மந்திரவாதி கங்கா சொய்சா வெளியிட்ட பேஸ்புக் பதிவு கிரிக்கெட் அரங்கில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
காரணம், இலங்கை அணி வெற்றிக்கு தான் பில்லி, சூனியம் செய்ததுதான் காரணம் என பதிவிட்டிருந்தார். அதில், தனது வீட்டுக்கு இலங்கை தலைவர் தினேஷ் சண்டிமால் வந்திருந்ததாகவும், அவர் தான் குறித்த டெஸ்ட் தொடரில் இலங்கை வெல்ல மந்திரம் போட்டு பூஜை செய்யும்படி கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
சண்டிமால் தனது வீட்டில் இருந்தபோது எடுத்த போட்டோவையும் பேஸ்புக்கில் ஷேர் செய்திருந்தார். மேலும், விளையாட்டு துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகராவுக்கு நன்றி கூறுகிறேன்.
அவர் தான் சண்டிமாலை தன்னை பார்க்க அனுப்பி வைத்தார் எனவும் இலங்கை கிரிக்கெட்டின் பொற்காலத்தை உருவாக்குவேன் எனவும் பதிவிட்டிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ஜெயசேகரா, கங்கா மீது வழக்கு தொடர்போவதாக கூறியுள்ளார்.
அமைச்சர் எச்சரிக்கையை தொடர்ந்து, பேஸ்புக் பதிவை கங்கா அழித்துள்ளார்.கங்கா செய்வினையால் இலங்கை வெற்றி பெற்றிருந்தால் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 5-0 என்ற கணக்கில் இலங்கை படுதோல்வியை சந்தித்தது ஏன் என்று அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Related posts:
|
|