பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடுவது பற்றி அரசுதான் முடிவு எடுக்க வேண்டும்: டோனி

Tuesday, November 28th, 2017

காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைதியையும், ஒற்றுமை உணர்வையும் வளர்க்கும் நோக்கில் பாரமுல்லா மாவட்டம் யூரி நகரில் இராணுவம் நடத்தும் கிரிக்கெட் தொடரில் 110 அணிகள் பங்கேற்றுள்ளனர்.

அதன் இறுதி போட்டியை இராணுவத்தில் லெப்டினன்ட் கேணல் பட்டம் அளித்து கவுரவிக்கப்பட்ட டோனி நேரில் கண்டுகளித்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் ஒரு விளையாட்டு மட்டுமல்ல, அதற்கு மேலானது.

பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடலாமா, வேண்டாமா என்பது குறித்து அரசே முடிவெடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எல்லை பயங்கரவாதம் காரணமாக பாகிஸ்தான் உடனான கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது இல்லை என இந்திய தரப்பில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பலமுறை அழைப்பு விடுத்தும் சாதமான பதில் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Related posts: