பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடரில் குப்தில் நீக்கம்!

Saturday, November 12th, 2016

பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. குறித்த தொடருக்கான நியூசிலாந்து அணியில் இருந்து மார்ட்டின் குப்தில் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. முதல் போட்டி வருகிற 17-ம் திகதி கிறிஸ்ட்சேர்சில் தொடங்குகிறது. 2-வது போட்டி 25-ம் திகதி தொடங்குகிறது.

இதற்கான நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தொடக்க வீரர் மார்ட்டின் கப்தில் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவர் இந்த வருடம் 9 போட்டிகளில் விளையாடி 393 ஓட்டங்கள் மட்டுமே அடித்துள்ளார். அவரது சராசரி 24.56. சொந்த மண்ணில் அவுஸ்திரேலியாவிற்கு எதிரான தொடர், தென்ஆபிரிக்கா மற்றும் இந்திய தொடரில் மோசமாக விளையாடியதால் அவர் நீக்கப்பட்டுள்ளார்.

அவருக்குப் பதிலாக 28 வயதான ஜீட் ராவல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் தற்போது நடைபெற்று வரும் உள்நாட்டு தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடி 244 ஓட்டங்கள் சேர்த்துள்ளார். சராசரி 40.66 ஆகும்.

தென்ஆபிரிக்கா தொடருக்கான நியூசிலாந்து அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால், குப்தில் விளையாடியதால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.ஜீட் ராவல் உடன் சகலதுறைவீரர் கொலின் டி கிராண்டோம்மே மற்றும் 2012-ம் ஆண்டு ஒரேயொரு டெஸ்டில் விளையாடிய மற்றொரு சகலதுறைவீரர் டோட் ஆஸ்லே ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளார்.

இந்தியாவிற்கு எதிரான தொடரில் இடம்பிடித்திருந்தது ரோஞ்சி, சோதி மற்றும் பிரேஸ்வெல் ஆகியோருக்கு அணியில் இடம்கிடைக்கவில்லை. சான்ட்னெர் காயம் காரணமாக ஓய்வில் இருக்கிறார்.

பதாகிஸ்தான் தொடருக்கான நியூசிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

  1. கேன் வில்லியம்சன், 2. டோட் ஆஸ்லே, 3. ட்ரென்ட் போல்ட், 4. கொலின் டி கிராண்டோம்மே, 5. மாட் ஹென்றி, 6. டோம் லாதம், 7. ஹென்றி நிக்கோல்ஸ், 8. ஜிம்மி நீசன், 9. ஜீட் ராவல், 10. டிம் சவுத்தி, 11. ராஸ் டெய்லர், 12. நீக் வாக்னர், 13. வாட்லிங்.

15col2184

Related posts: