பாகிஸ்தானுக்கு சென்று விளையாட மாட்டோம் – இலங்கை !

Monday, October 16th, 2017

பாகிஸ்தானில் நடக்கவிருக்கும் டி20 போட்டியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என இலங்கை அணி வீரர்கள் நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்கள்.

இலங்கை – பாகிஸ்தான் அணிகள் இடையிலான கிரிக்கெட் தொடர் அரபு நாடுகளில் நடைப்பெற்று வருகிறது. தொடரின் கடைசி டி20 போட்டி மட்டும் பாகிஸ்தானின் லாகூரில் இந்த மாதம் நடத்தப்படவுள்ளது.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இலங்கை அணி கடந்த 2009-ஆம் ஆண்டு லாகூர் சென்ற போது இலங்கை வீரர்கள் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள்.இதில் பலருக்கு காயம் ஏற்பட்டது. அதிலிருந்து இலங்கை அணி பாகிஸ்தானுக்கு செல்லவில்லை இந்நிலையில் தான் பாகிஸ்தானுக்கு செல்லவிருப்பமில்லை என இலங்கை அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள 40 வீரர்கள் அணி நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்

போட்டியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என கடிதத்தில் கோரியுள்ளனர். இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் மற்றும் ஐசிசி நிர்வாகம் இலங்கை வீரர்களிடம் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

பாகிஸ்தான் சென்று விளையாடுவதற்கான எல்லாவித சாத்தியகூறுகளையும் ஆராய்ந்து வருவதாகவும்இ அந்நாடு இலங்கைக்கு நெருக்கம் என்பதால் அவர்களை விட்டுதர விரும்பவில்லை எனவும் இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் நினைப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related posts: