பாகிஸ்தானுக்கு எதிரான மத்தியூஸ் இல்லை!

Thursday, September 21st, 2017

பாகிஸ்தானுடன் இடம்பெறுவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பை அஞ்சலோ மத்திவ்ஸ் இழந்துள்ளார்.

அவரின் பாதத்தில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக அவருக்கு இந்த வாய்ப்பு நழுவியுள்ளதாக தெரிக்கப்படுகிறது.இந்த டெஸ்ட் போட்டி இலங்கை அணிக்கு ஒரு புது அனுபவத்தை ஏற்படுத்தி கொடுக்கவுள்ளது.

அதாவது , இலங்கை அணி தனது முதலாது பகல் இரவு டெஸ்ட் போட்டியை இதன்போது விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.சுற்றுலா இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் இடம்பெறவுள்ள நிலையில் , இந்த இரண்டு போட்டிகளும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெறவுள்ளன.இருநாடுகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 28ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

டெஸ்ட் போட்டிகளை தொடர்ந்து இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் 5 ஒருநாள் போட்டிகளையும் மற்றும் இரண்டு இருபதுக்கு இருபது போட்டிகளையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இறுதி இருபதுக்கு இருபது போட்டி பாகிஸ்தானின் லாஹூர் நகரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில் , பாகிஸ்தான் கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை வழங்கவுள்ள பாதுகாப்பு அறிக்கை குறித்து ஆராய்ந்த பின்னரே இந்த போட்டி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: