பாகிஸ்தானுக்குச் செல்ல இலங்கை அணி தீர்மானம்!

பாகிஸ்தானுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஓர் ரி-–20 ஆட்டத்தில் விளையாடுவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை சம்மதம் தெரிவித்துள்ளது.
கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பய ணம் மேற்கொண்டு விளையாடிய போது, லாகூரில் வைத்து அவர்கள் பயணித்த பேருந்து மீது ஆயுததாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி னர். இலங்கை வீரர்கள் எவரும் சாவடையவில்லை.
சிலர் காயமடைந்தனர். இதற்குப் பின்னர் பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஏனைய அணிகள் பின்னடிப்புச் செய்கின்றன. சிம்பாப்வே மட்டும் ஒருமுறை பாகிஸ்தானுக்குச் சென்று விளையாடியுள் ளது. அங்கு சென்ற சிம்பாப்வே அணிக்கு வரலாறு காணாத பாதுகாப்பை பாகிஸ்தான் அரசும், கிரிக்கெட் சபையும் ஏற்படுத்திக் கொடுத் தது.
சிம்பாப்வே அணி சுற்றுப் பயணம் செய்த காரணத்தால் ஏனைய அணிகளும் தமது மண்ணுக்கு வரும் என்று பாகிஸ்தான் அழைப்பு விடுத்திருந்தது. எனினும் அந்த அழைப்பு பொய்த்துப் போனது.
இலங்கைக்கும் ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டது. இலங்கை கிரிக்கெட் சபை அந்த அழைப்பை நிராகரித்திருந்தது. தற்போது, ஓர் ரி-–20 ஆட்டத்தில் விளையாட உடன்பாடு தெரிவித்துள்ளது. பெரும்பாலும் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் அந்த ஆட்டம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related posts:
|
|