பாகிஸ்இந்தியாவின் கோரிக்கை நிராகரிப்பு!

Monday, March 4th, 2019

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஆலோசனைக் கூட்டம் துபாயில் நடந்தது. இதில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. புல்வாமா தாக்குதலை சுட்டிக்காட்டி, இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்துகள் நிலவின.

இதனைத் தொடர்ந்து, பயங்கரவாதத்துக்கு துணை போகும் நாட்டை கிரிக்கெட்டில் இருந்து தனிமைப்படுத்த வேண்டும் என்று பி.சி.சி.ஐ சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு கோரிக்கை வைத்தது. ஆனால், ஐ.சி.சி இந்த கோரிக்கையை நிராகரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ஐ.சி.சி-யின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘பயங்கரவாதத்தை சுட்டிக்காட்டி ஒரு போட்டியை ரத்து செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. அது அரசாங்கங்கள் இடையிலான பிரச்சனை. ஐ.சி.சி-க்கு அதில் எவ்வித பங்கும் இல்லை’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பி.சி.சி.ஐ நிர்வாகி ஒருவர் கூறுகையில், ஐ.சி.சி தெரிவிப்பது எங்களுக்குத் தெரியும். இருப்பினும் நாங்கள் ஒரு வாய்ப்பை எதிர்பார்க்கிறோம் என தெரிவித்துள்ளார்.

Related posts: