பழைய அவுஸ்திரேலியா அணியை இன்று காணமுடியவில்லை – ஸ்மித்!

Wednesday, September 21st, 2016

களத்தில் நெஞ்சை நிமிர்த்தி போராடும் அவுஸ்திரேலிய அணியின் பழைய ஆக்ரோசம் எங்கே போனது என அணியின் தலைவர் ஸ்மித் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், அவுஸ்திரேலியா அணி வீரர்கள் சமீபகாலமாக களத்தில் அமைதியாக செயல்படுகின்றனர். இது அவுஸ்திரேலியா அணிக்கு சரிப்பட்டு வராது என்றும் பழைய ஆக்ரோசம் தேவை எனவும் கூறியுள்ளார்.

இலங்கைக்கு எதிரான தொடரின் போது ஆக்ரோசமான விளையாட்டு வார்னரைத் தவிர மற்ற வீரர்களிடம் இல்லை. இதனால் தான் இலங்கைக்கு எதிரான தொடரின் போது வாய்ப்புகள் இருந்த போதும், அதை நாம் சிறப்பாக செயல்படுத்த முடிய வில்லை, சில எளிய கேட்சுகளையும் தவறவிட்டோம் என கூறியிருந்தார்.

இது அணிக்கு சரிவராது, எதிர்வரும் தென் ஆப்பிரிக்க தொடரின் போது அனைத்து வீரர்களும் ஆக்ரோசமான ஆட்டத்தையும், உடல் மொழியையும் வெளிப்படுத்த வேண்டும். தற்போது அணியில் அமைதியான சில வீரர்கள் இருக்கின்றனர். அவர்கள் களத்தில் சொற்கள் அளவில் பெரிதாக வெளிப்படுத்தா விட்டாலும், நம் இருப்பை வேறு விதமாக காட்ட வேண்டும்.

அப்போது தான் பழைய அவுஸ்திரேலிய அணியினர் பாணியில் களத்தில் நெஞ்சை நிமிர்த்து செயல்படுத்த முடியும். அதனால் ஆற்றலை கொஞ்சம் அதிகப்படுத்துவோம் என தெரிவித்துள்ளார்.

625.0.560.350.160.300.053.800.668.160.90

Related posts: