பள்ளிச்சிறுவர்களை போன்று தோற்றமளித்தனர்: பார்சிலோனா தோல்வி குறித்து சுவாரஸ் ஆதங்கம்!

பார்சிலோனா தோல்விக்கு அணியின் டிபன்ஸ் வீரர்களே காரணம் என பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான லூயிஸ் சுவாரஸ் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
சாம்பியன்ஸ் லீக் தொடர் அரையிறுதி போட்டியில் இரண்டாவது லெக் ஆட்டத்தில் லிவர்பூல் அணியிடம் 4-0 என தோல்வியடைந்த பார்சிலோனா அணி தொடரிலிருந்து வெளியேறியது.
தோல்வி குறித்து போட்டியளித்த பார்சிலோனா நட்சத்திர வீரர் லூயிஸ் சுவாரஸ், எங்கள் மீது மழை போல் விழும் விமர்சனங்களை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கின்றோம். நாங்கள் மிகுந்த சோகத்திலும், வலியிலும் உள்ளோம். லிவர்பூல் அணி வீரர்கள் நான்காவது கோலின் போது எங்கள் அணியின் டிபன்ஸ் வீரர்கள் பள்ளிச்சிறுவர்களை போன்று தோற்றமளித்தனர் என வெளிப்படையாக தெரிவித்துள்ளார்
Related posts:
தொடர்கின்றது சங்கக்காராவின் அதிரடி: டாக்கா அணி மீண்டும் வெற்றி!
I.P.L தொடர்: அதிக விலைக்கு போனவர்கள் விபரம்!
அனுராதபுரத்தில் கால்கள் ஊனமுற்ற வீரர்களுக்கான செயலமர்வு!
|
|