பலஸ்தீன விவகாரத்தின் எதிரொலி – இஸ்ரேலுடனான ஆட்டத்தில் களமிறங்காது ஆர்ஜென்ரீனா!

Saturday, June 9th, 2018

பலஸ்தீனர்கள் வெளிப்படுத்திய எதிர்ப்பை அடுத்து நாளை நடைபெறவிருந்த இஸ்ரேலுடனான பயிற்சி ஆட்டத்தைக் கைவிட்டது ஆர்ஜென்ரீனா.

உலககிண்ணக் கால்பந்தாட்டத் தொடர் ர~;யாவில் எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பமாகிறது. இந்தத் தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஆர்ஜென்ரீனா அணி இஸ்ரேலுடன் நாளைய தினம் பயிற்சி ஆட்டமொன்றில் மோதுவதாக இருந்தது. எனினும் இந்த ஆட்டத்தில் இஸ்ரேலுடன் ஆர்ஜென்ரீனா அணி மோதக்கூடாது. ஆட்டத்தைப் புறக்கணித்து ஜெருசலேமில் இஸ்ரேல் மேற்கொள்ளும் அத்துமீறல்களுக்கு எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்று பலஸ்தீனம் கோரிக்கை வைத்தது. அவ்வாறு ஆர்ஜென்ரீனா இஸ்ரேலுடன் விளையாடினால் மெஸ்ஸியின் உருவப்படமும் ஆர்ஜென்ரீனக் கொடிகளும் எரிக்கப்படும் என்றும் பலஸ்தீன அரசியல் பிரமுகர்கள் சிலர் வலியுறுத்தினர். இந்தப் பின்னணியில் இஸ்ரேலுடனான ஆட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தது ஆர்ஜென்ரீனா.

Related posts: