பலமான நிலையில் பாகிஸ்தான்!

பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், டுபாயில் ஆரம்பமான முதலாவது போட்டியின் முதலாவது நாள் முடிவில், பலமான நிலையில் பாகிஸ்தான் உள்ளது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணித்தலைவர் மிஸ்பா-உல்-ஹக், தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார். பாகிஸ்தான் அணி சார்பாக, பாபர் அஸாம், மொஹமட் நவாஸ் ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொண்டனர்.
அந்தவகையில், தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் பாகிஸ்தான் அணி, முதல் நாள் ஆட்ட முடிவில், ஒரு விக்கெட் இழப்புக்கு 279 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
தற்போது களத்தில், அஸார் அலி 146, அசாட் ஷஃபிக் 33 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர். முன்னதாக, சமி அஸ்லாம் 90 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். வீழ்த்தப்பட்ட விக்கெட்டினை றொஸ்டன் சேஸ் கைப்பற்றினார்.
Related posts:
|
|