பருத்தித்துறை ஐக்கியம் சம்பியன்!

Saturday, March 17th, 2018

பருத்தித்துறை பிரதேச செயலக போட்டிகளில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கூடைப்பந்தாட்டப் போட்டியில் பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக் கழகம் சம்பியன் ஆகி சாதனை படைத்தது.

போட்டிகள் யாவும் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி கூடைப்பந்தாட்டத் திடலில் இடம்பெற்றது. அரை இறுதியில் செந்தோமஸ் விளையாட்டுக் கழகத்தை தோற்கடித்து இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்ற பருத்தித்துறை உதயதாரகை விளையாட்டுக் கழகத்தை பருத்தித்துறை ஐக்கியம் ஆண்கள் அணி 16:12 என்ற புள்ளி அடிப்படையில் வெற்றி பெற்று ஐக்கியம் ஆண்கள் அணி சம்பியன் ஆகியது.

தொடர்ந்து பெண்களுக்கு நடைபெற்ற போட்டியில் நெடியாடு விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக்கழக பெண்கள் அணியும் இறதி ஆட்டத்தில் மோதியது. இறுதியில் ஐக்கியம் பெண்கள் அணி 36:12 என்ற புள்ளி அடிப்படையில் வெற்றி பெற்று சம்பியன் ஆகினர். 2018 ஆம் ஆண்டுக்கான விளையாட்டுக் கழகங்களுக்கான கூடைப்பந்தாட்டப் போட்டியில் ஆண்கள் பெண்கள் இரு அணியினரும் சம்பியன் பட்டத்தை வென்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Related posts: