பரபரப்பான முதல் டெஸ்டில் வெற்றியை பதிவுசெய்தது இலங்கை !

Thursday, November 3rd, 2016

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக முதல் டெஸ்டில் களமிறங்கிய ரங்கன ஹேராத் தலைமையிலான இலங்கை அணி 225 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை- ஜிம்பாப்வே அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி ஹாரேராவில் நடந்தது.இதில் 5வது மற்றும் கடைசி நாள் ஆட்டமான இன்று ஜிம்பாப்வே அணியின் வெற்றிக்கு 412 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இலங்கை.

இந்நிலையில் இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழக்க ஆரம்பித்தது.கடைசி நேரத்தில் அணித்தலைவர் கிரிமர், மும்பா (88 பந்தில் 10 ஓட்டங்கள்) இருவரும் போட்டியை டிரா செய்ய போராடினர்.

இருப்பினும் கிரிமர் (175 பந்தில் 43 ஓட்டங்கள்) ஹேராத் பந்தில் ஆட்டமிழக்க, ஜிம்பாப்வே அணி 186 ஓட்டங்களுக்கு சுருண்டது.இவரைத் தவிர தொடக்க வீரர் மாவோயோ 37 ஓட்டங்களும், சீன் வில்லியம்ஸ் 40 ஓட்டங்களும் எடுத்தனர்.

இதனால் இலங்கை அணி 225 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.இலங்கை அணிதரப்பில், ஹேராத், தில்ருவான் பெரேரா தலா 3 விக்கெட்டுகலையும், லஹிரு குமாரா, சுரங்க லக்மல் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

625.0.560.350.160.300.053.800.668.160.90

Related posts: