பரபரப்பான ஆட்டத்தில் தோல்வியை அடைந்த டோனி!

Saturday, April 30th, 2016

நேற்றைய பரபரப்பான ஐபிஎல் போட்டியில், குஜராத் லயன்ஸ் அணி கடைசி பந்தில் வெற்றி இலக்கை அடைந்து புனே அணியை வீழ்த்தியுள்ளது.

ஐபிஎல்-ன் 25 வது போட்டியான சுரேஷ் ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் – தோனி தலைமையிலான புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி புனேவில் நடந்தது. நாயணச் சுழற்சியில் வென்ற குஜராத் லயன்ஸ் அணித் தலைவர் தடுப்பாட்டத்தை தெரிவு செய்தார். இதையடுத்து களமிறங்கிய, புனே அணியினர் 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 195 ஓட்டங்களை குவித்தனர். ரஹானே 45 பந்துகளில் 53 ஓட்டங்களும், ஸ்டீவன் ஸ்மித் 54 பந்துகளில் 101 ஓட்டங்களும், தோனி 18 பந்துகளில் 30 ஓட்டங்களும் குவித்தனர்.

இதையடுத்து 196 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய குஜராத் அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். ஸ்மித் 37 பந்துகளில் 63 ஓட்டங்களும், மெக்குலம் 22 பந்துகளில் 43 ஓட்டங்களும், ரெய்னா 28 பந்துகளில் 34 ஓட்டங்களும், தினேஷ் கார்த்திக் 20 பந்துகளில் 33 ஓட்டங்களும் எடுத்தனர். பரபரப்பான இந்த ஆட்டத்தின் இறுதி ஓவரில் 9 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், ரெய்னாவும், அடுத்து களமிறங்கிய, கிஷனும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்நிலையில் கடைசி ஒரு பந்தில் ஒரு ஓட்டம் எடுக்க வேண்டி இருந்த பரபரப்பான நிலையில், ஜேம்ஸ் பால்க்னர் குஜராத் அணியை வெற்றி பெற செய்தார்.

நேற்றுஜேம்ஸ் பால்க்னரின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஐ.பி.எல் போட்டி தரவரிசையில், குஜராத் அணி தனது 5 வது வெற்றியை பதிவு செய்து, தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

Related posts: