பரத்வைட் அரைசதம்: வெஸ்ட் இண்டீஸ் நிதான ஆட்டம்!

Thursday, August 11th, 2016

வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 353 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின் தனது முதல் இன்னிங்சை துவக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பான ஆரம்பத்தை வெளிப்படுத்தியுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் செயின்ட் லுாசியாவில் நடக்கிறது. முதல் நாள் ஆட்ட முடிவில், இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 234 ரன்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில் இரண்டாவது நாள் ஆட்டத்தை இந்திய அணியின் அஷ்வின்(118), சகா(104) சதம் கடந்து அசத்தினர். ரவிந்திர ஜடேஜா(6) நிலைக்கவில்லை. பின் வரிசை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, உணவு இடைவேளைக்கு பின் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 353 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை துவக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பான துவக்கம் கண்டது. துவக்க வீரர் ஜான்சன் 4 ரன்களில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஸ்லிப்பில் ராகுல் தவறவிட்டார். இதனை சரியாக பயன்படுத்தாத ஜான்சன், 23 ரன்களில் ராகுலின் துல்லிய த்ரோவில் ரன் அவுட்டாகி வெளியேறினார். மற்றொரு துவக்க வீரர் பரத்வைட் அரைசதம் அடித்து அசத்தினார். ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்துள்ளது. பரத்வைட்(53), டுவைன் பிராவோ(18) அவுட்டாகாமல் உள்ளனர்.

Related posts: