பயிற்றுவிப்பாளர் இன்றி இந்தியா சென்றுள்ள இலங்கை அணி!

இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக அறிவிக்கப்பட்ட திலான் சமரவீர அணியுடன் இணையவில்லை இந்தியத் தொடருக்கு முன்னதாக அவர் பதவி ஏற்பார் என்று கூறப்பட்டாலும், இன்னும் அதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகவில்லை.
இந்நிலையில் இலங்கை கிரிக்கட் அணி ஆறு வாரங்களுக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு இந்தியா சென்றது.
இன்றுமுதல் (09) இலங்கை அணி தமது பயிற்சிகளை ஆரம்பிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த சுற்றுப்போட்டியின் போது மூன்று டெஸ்ட் 3 போட்டிகள் , 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 இருபதுக்கு இருபது போட்டிகளில் இலங்கை அணி கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.இருநாட்டுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 16ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
Related posts:
இந்திய வரலாற்றில் முதல் முறையாக கோஹ்லி சாதனை!
சண்டிமாலுக்கு எலும்புமுறிவு!
உலகக்கிண்ண கிரிக்கெட் - சுப்பர் சிக்ஸ் சுற்றை வெற்றியுடன் ஆரம்பித்தது இலங்கை!
|
|