பயிற்சி ஆட்டம் – இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் எசக்ஸ் 237/5!

Friday, July 27th, 2018

இங்கிலாந்து – இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடருக்கு முன்னோட்டமாக மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் எசக்ஸ் அணியை எதிர்த்து இந்தியா விளையாடுகிறது.

டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. முரளி விஜய் 53 ரன்னிலும், விராட் கோலி 68 ரன்னிலும், லோகேஷ் ராகுல் 58 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். சிறப்பாக ஆடிய தினேஷ் கார்த்திக் 82 ரன்களில் அவுட்டானார். ஹர்திக் பாண்ட்யா 51 ரன்னில் வெளியேறினார். இறுதியில், இந்திய அணி 100.2 ஓவரில் 395 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

எசக்ஸ் அணி சார்பில் பால் வால்டர் 4 விக்கெட்டும், கோல்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, எசக்ஸ் அணி தனது முதல் இன்னிங்சை தொடர்ந்தது. அந்த அணியின் வெஸ்லி, பெப்பர் ஆகியோர் அரை சதமடித்து அசத்தினர். இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் எசக்ஸ் அணி 5 விக்கெட்டுக்கு 237 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா சார்பில் உமேஷ் யாதவும், இஷாந்த் சர்மாவும் 2 விக்கெட் வீழ்த்தினர்.

Related posts: