பயிற்சியாளர் பதவிக்கு ஆசைப்பட்ட கில்லெஸ்பி!

Tuesday, July 18th, 2017

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் கில்லெஸ்பி ஆசைப்பட்டதாக கூறியுள்ளார்.

ஆனால் தற்போது பப்புவா நியூகினியா அணியின் பயிற்சியாளராக உள்ளதால் அவர் இந்த முடிவை கைவிட்டதாக தெரிவித்துள்ளார்

இதுகுறித்து கில்லெஸ்பி கூறுகையில் ”இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தீவிரமாக யோசித்தேன். இதுகுறித்து எனது குடும்பத்துடன் விவாதித்தேன். பின்னர் எனது முடிவை கைவிட்டுவிட்டேன்.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி என்பது மிகவும் சிறப்பானது என்று நினைக்கின்றேன். அந்த பதவியை பெற்ற ரவி சாஸ்திரிக்கு வாழ்த்துக்கள்” என கூறினார்.

Related posts: