பயிற்சிகளுக்கு திரும்பியுள்ள பார்சிலோனா அணி வீரர்கள் !

Saturday, May 9th, 2020

பார்சிலோனா கால்பந்து அணி வீரர்கள் நேற்றைய தினம் தனிப்பட்ட பயிற்சிகளுக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜுன் மாதத்தில், பார்வையாளர்களற்ற மூடிய விளையாட்டு அரங்கில் கால்பந்து போட்டிகளை நடத்துவது குறித்து ஸ்பெய்ன் கவனம் செலுத்தி வருகின்றது.

இதன்படி, கால்பந்து போட்டிகளை நடத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, வீரர்களை கொரோனா வைரஸ் சோதனைக்கு உட்படுத்துவதை ஆரம்பித்துள்ளதன் பின்னர், பயிற்சிகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பயிற்சி நடவடிக்கையானது, நெறிமுறைகள் பயிற்சி, தனிப்பட்ட பயிற்சி, குழு பயிற்சி மற்றும் கூட்டு பயிற்சி என்ற நான்கு கட்டங்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: