பயங்கரவாதத்தை நியாயப்படுத்திய குற்றச்சாட்டு – அல்ஜீரிய வீரர் யூசெப் அடெல், பிரான்ஸ் காவல்துறையினரால் நேற்று கைது!
Saturday, November 25th, 2023லிகு 1 காற்பந்து அணிக்காக விளையாடும் அல்ஜீரிய வீரர் யூசெப் அடெல், பிரான்ஸ் காவல்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இஸ்ரேல் – ஹமாஸ் போர் குறித்து சமூக ஊடகப் பதிவொன்றை யூசெப் அடெல் வெளியிட்டிருந்த நிலையில், பயங்கரவாதத்தை நியாயப்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பதிவை அடுத்து அவருக்கு 7 போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. எவ்வாறாயினும் உடனடியாக குறித்த பதிவை நீக்கிய அவர், அதற்கு மன்னிப்பும் கோரியிருந்தார்.
இந்தநிலையில் மதவெறியை தூண்டிய குற்றச்சாட்டில் பிரான்ஸின் நீஸில் உள்ள குற்றவியல் நீதிமன்றில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 18ஆம் திகதி, யூசெப் அடெல் வழக்கை எதிர்கொள்வார் என அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
ஆயிரக்கணக்கான இங்கிலாந்து ரசிகர்களை 200 ரஷிய ரய்ஷியகர்கள் எப்படி தாக்க முடியும்? - புடின்
மாலிங்க-குலசேகர சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து கருத்து!
இலங்கை அணி வீரர்களுக்கு மஹானாம விடுத்துள்ள கோரிக்கை!
|
|