பந்தை புதிதாக்க மின்ற் தடவியதாக டு பிளசிஸ் மீது குற்றச்சாட்டு!

Friday, November 18th, 2016

பந்தின் மீது மின்ற் தடவி பந்தை புதிதாக மாற்றியதாக, தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் தலைவர் டு பிளசிஸ் மீது சர்வதேச கிரிக்கெட் சபை (ICC) குற்றம் சாட்டியுள்ளது.

அவுஸ்திரேலிய அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியாவின் ஹொபார்ட்டில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியின் போதே அவர் இவ்வாறு சர்வதேச கிரிக்கெட் விதிமுறைகளை மீறியுள்ளதாக ICC குற்றஞ்சாட்டியுள்ளது.

பந்தின் மீது, தனது வாயிலுள்ள ச்விங் கம் (Chewing Gum)இலுள்ள மின்ற் இனை கைகளால் பந்தின் மீது தடவி அதனை புதிதாக மாற்றுவது, தொலைக்காட்சியின் மூலம் அவதானிக்கப்பட்டதை அடுத்து, ICC இனால், குறித்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

ஐசிசி யின் ஒழுக்க விதிமுறை 2.2.9 ஆம் சரத்திற்கு (பந்தின் நிலையை மாற்றுதல்) அமைய குறித்த நடவடிக்கை குற்றத்திற்குரிய செயலாகும். அதன் அடிப்படையில் ICC இன் 42.3 சட்டம் (நியாயமற்ற தன்மை) மீறப்படுவதால் ICC இன் 3.1.3 விதிக்கு அமைய (3.1.1 நடுவர், 3.1.2 அணியின் முகாமையாளர் 3.1.3 ICC பிரதான நிறைவேற்று பணிப்பாளர் ஆகியோரில் ஒருவரால்) குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை (15) இடம்பெற்ற குறித்த போட்டியின் இரண்டாம் இன்னிங்ஸில், குறித்த விடயம் இடம்பெற்றுள்ளது.இதன்போது, டு பிளசிஸ் தனது விரல்களை வாயினுள் விட்டு வாயிலுள்ள ச்விங் கம், மின்ற் இனை பந்தில் தடவுவதோடு, இவ்வாறு இரண்டிற்கும் மேற்பட்ட தடவைகள் மேற்கொள்வது பதிவாகியுள்ளது.

அத்துடன், குறித்த நடவடிக்கையின் பின்னர் ககிசோ ரபாடாவினால் வீசப்பட்ட வீசப்பட்ட முதல் பந்தில் (53.4) பீட்டர் நெவில், பிடியெடுப்பின் மூலம் ஆட்டமிழந்தார் என்பதோடு, அதே ஓவரின் இறுதிப் பந்தில் (53.6) ஜொய் மென்னி LBW முறை மூலம் ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இரண்டாம் நிலை (Level 2) விதி மீறலான குறித்த குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்படும் சந்தரப்பத்தில், குறித்த வீரரின் 50% – 100% போட்டிக்கான சம்பளம் அல்லது/ அத்துடன் 2 இடைநீக்க புள்ளிகள் மற்றும் 3 அல்லது 4 மறை புள்ளிகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயினும் குறித்த குற்றச்சாட்டுகளை டு பிளசிஸ் மறுத்துள்ளதோடு, சாதாரணமாகவே தான் அவ்வாறு செய்ததாகவும், இதில் எவ்வித உள்நோக்கமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

குறித்த போட்டியில் தென்னாபிரிக்க அணி, இன்னிங்ஸ் மற்றும் 80 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருந்தது.

அவுஸ்திரேலியா 85 & 161

தென்னாபிரிக்கா 32

மூன்று போட்டிகளைக் கொண்ட குறித்த தொடரில் 2 – 0 எனும் கணக்கில் தென்னாபிரிக்க தொடரைக் கைப்பற்றியுள்ளதோடு, 3 ஆவது போட்டி எதிர்வரும் 24 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

du_plessis_plead_guilty-3

Related posts: