பந்தைச் சேதப்படுத்திய விவகாரம் எதிரொலி : ஐ.சி.சி அதிரடித் திட்டம்!

Sunday, April 1st, 2018

பந்தைச் சேதப்படுத்திய விவகாரம் கிரிகட் வட்டாரத்தில் புயலைக் கிளப்பிய நிலையில் சர்வதேச கிரிகட் சபை இது தொடர்பான விதிமுறைகளை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளது .தென்னாபிரிக்காவுக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலியா வீரர் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்த முயற்சித்ததும் அதற்கு ஸ்மித் ,வானர் மூளையாக செயற்பட்டதும் அம்பலமானது

அவுஸ்திரேலிய வீரர்கள் மோசடி உலக கிரிகட் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது  தவறை வெளிப்படையாக ஒப்புக் கொண்ட ஸ்டீவன் ஸ்மித்தின் கப்டன் பதவி பறிபோனது .

இந் நிலையில் வீரர்களின் ஒழுங்கீனமான செயல்பாடு பந்தை சேதப்படுத்தல் விவகாரம் தொடர்பான விதிமுறைகளை மாற்றி அமைப்பது குறித்து சர்வதேச கிரிகட் சபை (ஜ.சி.சி)பரிசீலனை செய்யத் தொடங்கி இருக்கின்றது .பந்தின் தன்மையை மாற்றுவதை மிகப் பெரிய குற்றமாக கணக்கில் எடுத்துக் கொள்ள ஜ.சி.சி. திட்டமிட்டுள்ளது .இது தொடர்பாக அடுத்த மாதம் நடைபெறும் ஜ.சி.சி கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கின்றது

Related posts: