பந்து வீச எரங்காவிற்கு ஐ.சி.சி. தடை!

Monday, June 20th, 2016

ஐ.சி.சி. விதிமுறைக்கு மாறாக பந்து வீசியதால் சர்வதேச போட்டிகளில் பந்து வீச இலங்கை வீரர் எரங்காவிற்கு ஐ.சி.சி. தடை விதித்துள்ளது.

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷமிந்தா எரங்கா. இவர் இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் இடம்பிடித்து விளையாடினார். அப்போது அவர் பந்து வீச்சு மீது சந்தேகம் இருப்பதாக நடுவர்கள் புகார் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து அவரது பந்து வீச்சு பரிசோதனைக்கு உட்பட்டது. அப்போது அவர் ஐ.சி.சி. விதிக்கு மாறாக அனைத்து பந்துகளையும் 15 டிகிரிக்கு மேல் கையை வளைத்து வீசியது தெரிய வந்தது. இதனால் ஐ.சி.சி. அவரை சர்வதேச போட்டியில் பந்து வீச தடை விதித்துள்ளது. இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த 6ம் திகதி ஐ.சி.சி. அங்கீகாரம் பெற்ற இடத்தில் தனது பந்து வீச்சை சோதனைக்கு உட்படுத்தினார். அதன்பின் பந்து வீச்சில் மாற்றம் செய்து மீண்டும் பரிசோதனை செய்ய அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

நாளை அவர் மீண்டும் பரிசோதனைக்கு தயாரானார். இந்நிலையில் இன்று இதய நோய் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் இந்த தடை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

Related posts: