பந்து வீச்சை மறுமதிப்பீடு செய்யும் சோதனைக்காக அகில சென்னை பயணம்!

தனது பந்துவீச்சை மறுமதிப்பீடு செய்யும் சோதனைக்காக இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சய இன்று(01) சென்னை நோக்கி சென்றடையவுள்ளார்.
இலங்கை அணியின் இளம் வீரரான தனஞ்சயவின் பந்து வீசும் முறை சந்தேகத்துக்கு இடமளிக்கும் விதமாக இருப்பதாக கடந்தாண்டு இங்கிலாந்து – இலங்கை போட்டியின் போது முறைப்பாடு அளிக்கப்பட்டது.
இதன் பின்னர் தனஞ்சயவிற்கு பந்து வீச ஐசிசி கடந்த டிசம்பர் மாதம் தடை விதித்திருந்த நிலையில், அவரின் பந்து வீச்சு முறையை மறுமதிப்பீடு செய்யும் சோதனை சென்னையில் உள்ள Center for Sports Science (CSS) -ல் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
தோல்வியை தவிர்க்குமா வங்கதேசம்!
இலங்கை – ஆஸி தொடர் - நாணய சுழற்சியில் அவுஸ்திரேலியா வெற்றி!
மாற்றுக் கருத்துக்களை வழங்கியுள்ளதாக சனத் மீது குற்றச்சாட்டு!
|
|