பந்து வீச்சளராக பரிணாமம் எடுக்கும் சச்சின் மகன்!

மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரரகளில் ஒருவரும் மாஸ்டர் பிலாஸ்டர் என வர்ணிக்கப்படுபவர் சச்சின். ஆனால் அவரது மகனான அர்ஜூன் தெண்டுல்கர், பந்துவீச்சில் ஜொலித்து வருகின்றார்.
19வயதிற்கு மட்டுப்படுத்தப்பட்ட கூச்பெஹார் டிராபி கிரிக்கெட் போட்டிகள் தற்சம யம் நடைபெற்று வருகின்றன. மும்பை மற்றும் ரயில்வே அணிகள் பலப்பரீட்சை நடாத்தின. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் பந்துவீசிய அர்ஜூன் தெண்டுல்கர் 6 ஓவர்கள் பந்துவீசி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றவிலை.
ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் 11 ஓவர்கள் பந்துவீசி 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். இதன் மூலம் மும்பை அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் சச்சினின் மகன் அர்ஜூன் ஒருசிறந்த பவுலராக வளர்ந்து வருகின்றமை சிறப்பானதாகும். ஏற்கனவே அர்ஜூன், ஒருமுறை 5 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.
Related posts:
BMW கார் வேண்டாம்- சச்சினின் பரிசை நிராகரித்த பதக்க நாயகி!
தலைவர் பதவியில் இருந்து வில்லியர்ஸ் விலகல்?
சாதனையை தவறவிட்ட சங்ககாரா!
|
|