பந்து தாக்கியதில் ஐஸ் ஹொக்கி நடுவர் பலி!

Wednesday, September 14th, 2016

செக் குடியரசில் இடம்பெற்ற ஐஸ் ஹொக்கி போட்டி ஒன்றின்போது ஹொக்கி பந்து தலையில் பட்டு காயம் ஏற்பட்டதில் நடுவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

16 வயதிற்குட்பட்டோருக்கான ஐஸ் ஹொக்கி போட்டியில் பாவெல் லைங்கா என்ற 24 வயது வாலிபர் நடுவராக செயல்பட்டார்.

போட்டி நடக்கும்போது லைங்கோ தலை மீது ரப்பர் பந்து பலமாக தாக்கியது. இதனால் காயம் அடைந்த லைங்கா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த லைங்கா கடந்த 10ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த தகவலை செக் குடியரசு ஐஸ் ஹொக்கி சம்மேளனம் வெளியிட்டுள்ளது. பிரிவு 2 லீக்கில் நடைபெறும் அனைத்து போட்டிகளுக்கு முன்பும் லைங்காவிற்காக அஞ்சலி செலுத்தப்படும் என்று கூறியுள்ளது.

18

Related posts: