பந்து தாக்கியதால் மூளையில் ரத்த கசிவு: ஆபத்தான நிலையில் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்!

Thursday, January 26th, 2017

பிக் பாஷ் தொடரில் விளையாடிவரும் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஜோ மென்னிக்கு தலையில் பலமாக பந்து தாக்கியதில் மூளையில்  இரத்தகசிவு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்..

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோ மென்னி (28). இவர் சமீபத்தில் நடந்த தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான ஹோபர்ட் டெஸ்டில் அறிமுகம் ஆனவர்.

தற்போது பிக் பாஷ் உள்ளூர் ‘டி-20’ தொடரில் சிட்னி அணிக்காக விளையாடி வருகிறார்.

இத்தொடரின் அரையிறுதியில் பங்கேற்க வலைபயிற்சியில் ஈடுபட்ட இவர், மைக்கேல் லம்பிற்கு பந்து வீசியதாக கூறப்படுகிறது.

அப்போது எதிர்பாராதவிதமாக பந்து மென்னியின் தலையில் பலமாக தாக்கியுள்ளது. இதில் சுருண்டு விழுந்த மென்னி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு இவருக்கு தீவிர பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் பயப்படும் அளவுக்கு எதுவுமில்லை என்பதை உறுதி செய்த பின்னர் மென்னி மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளார்.

இந்த நிலையில் குறித்த சோதனை அறிக்கை நேற்று வெளியானது. இதில் மென்னி தலைப்பகுதியில் எலும்பு பகுதியில் முறிவு ஏற்பட்டு, மூளைக்குள் ரத்தம் கசிவு இருப்பது தெரியவந்தது. இதனால் அவர் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தற்போது முழு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள மென்னிக்கு இந்த காயத்துக்காக அறுவைசிகிச்சை எதுவும் தேவையில்லை என்பதால், விரைவில் அவர் குணமடைந்து திரும்புவார் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

1ab7dd579039070e70274d58b8a3f91e

Related posts: