பந்துவீச்சில் தாமதம்: தினேஸ் சந்திமால் நீக்கம் !

Monday, March 12th, 2018

இலங்கை 20க்கு 20 கிரிக்கட் அணியின் தலைவர் தினேஸ் சந்திமாலுக்கு அடுத்து வரும் இரு போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் அணியுடன் இடம்பெற்ற சுதந்திர கிண்ண கிரிக்கட் போட்டியின் போது, இலங்கை அணி பந்து வீசுவதில் தாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாகவே தினேஸ் சந்திமாலுக்கு அடுத்து வரும் 2 போட்டிகளில் விளையாடுவதற்கான தடை, ஐசிசியால் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இலங்கை அணி விளையாடவுள்ள அடுத்த இரு போட்டிகளுக்கு தலைவராக சகலதுறை ஆட்டக்காரர் திஸர பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts: