பத்தொன்பது வயதுக்குட்பட்டோர் உலக்கிண்ண இலங்கை குழாம் அறிவிக்கபட்டது
Friday, December 29th, 2017
நியூஸிலாந்தில் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்டோர் உலகக்கிண்ணத் தொடருக்கான 15 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. அணியின் தலைவராக இடதுகை துடுப்பாட்ட வீரரும், சுழற்பந்து வீச்சாளருமான கமிந்து மெண்டிஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
கமிந்து மெண்டிஸ் கடந்த 2016ம் ஆண்டு பங்களாதேஷில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோர் உலகக்கிண்ண போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இவரது அனுபவம் மற்றும் சிறந்த துடுப்பாட்டத்தை கவனத்திற்கொண்டு, இவர் இலங்கை அணியின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
19 வயதுக்குட்பட்டோர் உலகக்கிண்ண தொடரில் இலங்கை அணி டி குழுவில் இடம்பிடித்துள்ளது. இக்குழுமத்தில் இலங்கை அணியுடன் பாகிஸ்தான், அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன.
இலங்கை அணி தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை ஜனவரி 14ம் திகதி எதிர்கொள்ளவுள்ளது. இரண்டாவது போட்டியில் ஆப்கானிஸ்தானை (ஜனவரி 17) எதிர்கொள்ளவுள்ள இலங்கை அணி, 3வது போட்டியில் பாகிஸ்தானை ஜனவரி 19ம் திகதி எதிர்கொள்ளவுள்ளது. 19 வயதுக்குட்பட்டோர் உலகக்கிண்ணத் தொடர் எதிர்வரும் ஜனவரி 13ம் திகதிமுதல் பெப்ரவரி 3 திகதிவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணி விபரம்
1. கமிந்து மெண்டிஸ் (தலைவர்)
2. தனஞ்சய லக்ஷான்
3. சந்துஷ் குணதிலக
4. ஹசித பொயாகொட
5. நவிந்து பெர்னாண்டோ
6. நிபுன் தனஞ்சய
7. அஷேன் பண்டார
8. கிஷான் சஞ்சுல
9. நிஷான் மதுஷாங்க
10. ஜெஹான் டேனியல்
11. பிரவீன் ஜெயவிக்ரம
12. ஹரேன் புட்டில
13. திசரு ரஷ்மிக
14. கலன பெரேரா
15. நிபுன் மாலிங்க
Related posts: