பதிலடி தருவோம்: சனத் ஜெயசூர்யா !

நடைபெற்று முடிந்த தென் ஆப்பிரிக்காவுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடர் படுதோல்விக்கு நிச்சயம் பதிலடி தருவோம் என சனத் ஜெயசூர்யா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் சனத் ஜெயசூர்யா அளித்துள்ள பேட்டியில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரின் இலங்கை அணியின் தோல்விக்கு சாக்கு சொல்ல விரும்பவில்லை.
இலங்கை அணி சரியாக விளையாடவில்லை என்பதே உண்மை. அதிலும் முக்கியமாக பேட்டிங்கில் வீரர்கள் சொதப்பியது முக்கிய காரணம்.
தென் ஆப்பிரிக்கா அணி 2018ல் இலங்கைக்கு வந்து விளையாடவுள்ள போட்டிகளில் எங்கள் தோல்விக்கு பதிலடி தருவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இனி தென் ஆப்பிரிக்கா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு சென்று விளையாடும் போது அவர்கள் ஆடுகளத்தை கணித்து ஆடுவது பற்றி அரவிந்தா டிசில்வா, பயிற்சியாளர் கிரஹாம் போர்ட் ஆகியோருடன் ஆலோசனை நடத்துவோம் என கூறியுள்ளார்.
இந்த அதிரடி விரைவில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ஆரம்பமாகும் என கூறிய அவர் அந்நாட்டு நிலவரம் மற்றும் களத்தை கணிக்க வீரர்கள் தொடர் ஆரம்பிக்கும் முன்னரே அங்கு அனுப்பப்படலாம் என ஜெயசூர்யா கூறியுள்ளார்.
Related posts:
|
|