பதிலடி கொடுக்குமா இங்கிலாந்து?

Thursday, July 27th, 2017

இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.

ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட்டும், தென்னாபிரிக்க அணிக்கு டு பிளஸிசும் தலைமைதாங்குகின்றனர்.நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இதுவரை நடந்து முடிந்துள்ள இருபோட்டிகளில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவுசெய்துள்ளது.

ஆகையால் இத்தொடரின் வெற்றியை தக்கவைத்துக்கொள்ள இப்போட்டி முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பெற்ற தோல்விக்கு இங்கிலாந்து பதிலடி கொடுக்குமா? அல்லது தென்னாபிரிக்க அணியின் வெற்றி தொடருமா என பொறுத்திருந்து பார்ப்போம்.இரு அணிகளும் சமபலம் பொருந்திய அணிகள் என்பதால் இப்போட்டி மிகவும் சுவாரஸ்யமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Related posts: