பதவி விலகல் கடிதத்தை கையளித்த அனில் கும்ளே!

Wednesday, June 21st, 2017

தமது பயிற்சியளிப்பு பாணி குறித்து, அணித் தலைவர் விராட் கோலி அதிருப்தி கொண்டுள்ளமையாலேயே தாம் பதவி விலகுவதாக இந்திய கிரிக்கட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் அணில் கும்லே தெரிவித்துள்ளார்.

தமது பதவி விலகல் கடிதத்தை அனில் கும்லே நேற்றையதினம் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையிடம் கையளித்தார்இதனை அடுத்து அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் இந்த செய்தியை அவர் பதிவு செய்துள்ளார். அணித்தலைவருக்கும் பயிற்றுவிப்பாளருக்கும் இடையிலான உறவு முக்கியமானது

ஆனால் தமது பயிற்சியில் குறைபாடுகள் இருப்பதாக அணித் தலைவர் கிரிக்கட் கட்டுப்பாட்டு சபைக்கு தெரியப்படுத்தி இருப்பதாக கடந்த தினமே தமக்கு கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையினால் அறியப்படுத்தப்பட்டது. இந்த விடயம் அதிர்ச்சியளிக்கிறது இந்த விடயத்தில் தமக்கும் அணித்தலைவருக்கும் இடையில் சமரசத்தை ஏற்படுத்த முயற்சித்தாலும், தற்போது பதவி விலகுவதே சரியானதாக அமையும் என்று தாம் கருதுவதாக அனில் கும்லே குறிப்பிட்டுள்ளார்

Related posts: