பண்டத்தரிப்பு பெண்கள் அணி இறுதிக்குத் தகுதி!

201608190905074806_Men-soccer-final-match-Brazil-Germany_SECVPF Wednesday, May 16th, 2018

வடமாகாண கல்வித் திணைக்களம் நடத்தும் வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான கால்பந்தாட்டத்தில் 20 வயது பெண்கள் பிரிவில் இறுதி ஆட்டத்துக்குத் தகுதிபெற்ற பண்டத்தரிப்பு உயர்தர பாடசாலை பெண்கள் அணி. யாழ்ப்பாணம் கனகரத்தினம் மகாவித்தியாலய மைதானத்தில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தர பாடசாலை அணியை எதிர்த்து கீரிமலை நகுலேஸ்வர வித்தியாலய அணி மோதியது.

ஆட்டம் ஆரம்பமாகி சில நிமிடங்களிலேயே பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தர பாடசாலை அணியின் வீராங்கனை நிரோசிகா ஒரு கோலைப் பதிவு செய்தார். அதன் பின்னர் ஆட்டத்தின் 12 ஆவது நிமிடத்தில் கீரிமலை நகுலேஸ்வர வித்தியாலய அணி முறையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்த பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தர பாடசாலை அணிக்குத் தண்டனை உதை கிடைத்தது. அதனை அந்த அணியின் வீராங்கனை வலன்ரீனா முதல் பாதியாட்டத்தில் பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தர பாடசாலை அணி 2:0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. இரண்டாம் பாதியில் நிரோசிகா மற்றொரு கோலைப் பதிவுசெய்ய முடிவில் 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று இறுதிக்குத் தகுதி பெற்றது பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தர பாடசாலை அணி. யாழ்ப்பாணம் மாவட்ட பாடசாலைகள் கால்பந்தாட்டச் சங்கம் கடந்த மாதங்களுக்கு முன்னர் வடமாகாண ரீதியில் நடத்திய தொடரின் இறுதி ஆட்டத்தில் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி அணியை எதிர்த்து பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தர பாடசாலை அணி மோதவிருந்தது. ஆனால் பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தர பாடசாலை அணி கலந்து கொள்ளாமையால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. வடமாகாண ரீதியாக மீண்டும் இறுதியாட்டத்தில் இரு அணிகளும் சந்திப்பதனால் ரசிகர்களிடையே இந்த ஆட்டம் தொடர்பில் பெரிய எதிர்ப்பு உள்ளது.


32861036_1770611652977914_7456190262398681088_n

சாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி  ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..!