பணத்தை உதறித் தள்ளினாரா ரொனால்டோ?

Sunday, January 1st, 2017

போர்த்துக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ சீனாவின் 300 மில்லியன் யூரோ ஒப்பந்தத்தை நிராகரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கிறிஸ்டியானோ ரொனால்டோ உலக கால்பந்து வீரர்களில் சிறந்தவராக உள்ளார். இவர் தற்போது ரியல் மாட்ரிட் கிளப்புக்காக ஆடி வருகிறார்.

இந்நிலையில் ரொனால்டோ சீனாவின் 300 மில்லியன் யூரோ ஒப்பந்தத்தை நிராகரித்துள்ளதாக ஏஜண்டான ஜோர்ட் மெண்டஸ் தெரிவித்துள்ளார்.

அவர் ஒரு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், ரொனால்டோவிற்கான 300 மில்லியன் யூரோ ஒப்பந்தம் சீனாவிடம் இருந்து ரியல் மாட்ரிட் அணிக்கு வந்தது.

அதுமட்டுமல்லாது வருடம் 100 மில்லியன் ஊதியத்துடன் இந்த ஒப்பந்தம் வந்தது. எல்லாமே பணம் மட்டும் என்று எடுத்துக் கொள்ள முடியாது.

ரொனால்டோ தான் உலகத்திலே சிறந்த வீரர். அவர் ரியல் மாட்ரிட் அணியில் தான் மகிழ்ச்சியாக இருக்கிறார். அவருக்கு பணம் எல்லாம் பெரிய விடயம் இல்லை.

சீனாவின் சந்தை பெரிதாக இருந்தாலும் கூட அங்கு எல்லாம் ரொனால்டோ போக மாட்டார் என்று கூறியுள்ளார்.

Real Madrid's Cristiano Ronaldo celebrates scoring 2-2 during a Champions League soccer match round of 16 second leg, between Real Madrid and Schalke 04 at Santiago Bernabeu stadium, in Madrid, Spain, Tuesday, March 10, 2015. (AP Photo/Daniel Ochoa de Olza)

Related posts: