பட்மிண்டன் தொடரின் இறுதி போட்டியில் மீர் வர்மா வெற்றி!

Wednesday, February 28th, 2018

சுவிஸ்சலாந்தில் நடைபெற்ற ஓப்பன் பட்மிண்டன் தொடரின் இறுதி போட்டியில் இந்திய வீரர் சமீர் வர்மா வெற்றிப்பெற்றார்.

சர்வதேச ரீதியாக இரண்டாவது இடத்தில் உள்ள டென்மார்க் வீரர் ஜார்ஜென்சனும், இந்திய வீரர் சமீர் வர்மாவும் இறுதி போட்டியில் பங்கேற்றனர். முதல் செட்டை சமீர் வர்மா 21 இற்கு 15 என்ற புள்ளியில் வெற்றி பெற்றார்.

இதனை தொடர்ந்து, இரண்டாவது போட்டி கடுமையாக இருந்த போதிலும், 21 இற்கு 13 என்ற முறையில் அதனையும் சமீர் வர்மா கைப்பற்றினார். இந்த வெற்றியினை அவர் 36 நிமிடத்தில் பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: