பட்டையை கிளப்பியது இந்திய மகளிர் அணி!

Friday, November 18th, 2016

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணியை ஒருநாள் தொடரில் வெள்ளையடித்து தொடரை வென்று அசத்தியுள்ளது..

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய மகளிர் அணி, இந்தியாவிற்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.

அண்மையில் நடந்த முதல் இரண்டு போட்டிகளையும் இந்திய அணி வென்று தொடரை கைப்பற்றிய நிலையில், விஜயவாடாவில் நடைபெற்ற கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டியையும் இந்திய அணி வென்று அசத்தியுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 199 ஓட்டங்கள் எடுத்தது.இந்திய அணியில் அதிகபட்சமாக வேதா கிருஷ்ணமூர்த்தி 71 ஓட்டங்களும், தேவிகா ஆட்டமிழக்காமல் 32 ஓட்டங்களும் எடுத்தனர்.

200 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 49.1 ஓவரில் 184 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது. இந்தியத் தரப்பில் ராஜேஷ்வரி 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதன் மூலம் இந்திய அணி 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. அதுமட்டுமின்றி 3 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என கைப்பற்றி மேற்கிந்திய தீவுகள் அணியை ஒயிட் வாஷ் செய்து அசத்தியுள்ளது.

indialadycricketausie

Related posts: