பஞ்சாப்பின் தோல்விக்கு பிரீத்தி ஜிந்தா காரணம் – வீரர்களின் தேர்வில் தலையிட்டார் என இந்திய ஊடகங்கள் பரபரப்புத் தகவல்!

Wednesday, May 23rd, 2018

ஐ.பி.எல். தொடரில் பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெறாமல் பஞ்சாப் வெளியேறியமைக்கு அந்த அணியின் உரிமையாளர் ஜிந்தாவே முழுக் காரணம் என்று சில இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டன.

தொடரில் ஆரம்பத்தில் பஞ்சாப் அணி மிகவும் வலுவாக இருந்தது. அந்த அணி தான் விளையாடிய முதல் 7 ஆட்டங்களில் 6 ஆட்டங்களில் வெற்றிபெற்றிருந்தது. எனினும் இறுதி 7 ஆட்டங்களில் அவ்வாறான பெறுபேற்றை அந்த அணி வெளிப்படுத்தவில்லை. குறிப்பாக இறுதி 5 ஆட்டங்களிலும் தோல்வியடைந்தது. இந்தத் தொடர் தோல்விக்கு ஜிந்தா அணித் தெரிவில் தலையிட்டமையும் தலைமைப் பயிற்சியாளரான சேவாக் எடுக்க வேண்டிய சில முடிவுகளில் தலையிட்டமையுமே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் அணி இதுவரை ஒரு தடவையேனும் கிண்ணத்தைத் கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: